சரணங்கள்.
ஓடத்தின்மேலேறி-நந்தன்ஓங்குமகிழ்ச்சிமீறி
நாடவெவரும்நல்ல நடனக்கூத்தாடியே
நண்புடன்கதிபெற லாமென்றுறுதிகொண்டு.
(கொள்)
அக்கரைபோனானே-நந்தன்-ஆனந்தங்கொண்டானே
சிக்கெனவேசிவசிதம்பரேசனைக்காணச்
சிந்தைமகிழ்ந்துசிவத் தியானஞ்செய்துகொண்டு
(கொள்)
திருவாதிரைத்திருநாள்-செய்யுந்-தினமல்லவோயிந்நாள்
திருநடராஜமூர்த்தி திருமுகந்தனைக்கண்டு
சித்தங்களிப்பேனா னென்றுறுதிகொண்டு
(கொள்)
_________
வசனம்.
‘நந்தனார்’ இந்தப்பிரகாரம்
தோத்திரஞ்செய்துகொண்டு கொள்ளிடக்கரையைத்
தாண்டி வரும்போது தில்லைக்கோபுரத்தைக் கண்டு
தரிசனம்பண்ணுவார்.
தண்டகம்.
ராகம் - தன்யாஸி ; தாளம் - ஆதி.
பல்லவி.
கோபுரதரிசனமே-எந்தன்-பாபவிமோசனமே.
சரணங்கள்.
தாபங்கள்மூன்றுந்
தணிந்துவிடும்நல்ல
சோபனமுண்டாஞ் சோதிவிளங்கிய.
(கோபுர)
விண்ணணைந்துமே
லோங்கியேகண்டுநற்
கண்ணுளார்க்கெல்லாங் காட்சியளித்திடும்.
(கோபுர)
|