திருநாளைப்போவார்135நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அல்லும்பகலும் அமரர்துதித்திடும்
தில்லைக்கிறையோன் றினமுமகிழ்ந்திடும். (கோபுர)

__________

வசனம்.

நந்தனார், தில்லைத்தலம் இப்படியிருக்கிறதென்று சொல்லுகின்றார்.

ராகம் - நவரோஸ் ; தாளம் - ஆதி.

பல்லவி.

மாங்குயில்கூவியசோலைகளும் வாவிகூபதடாகங்களுந்
தூங்கதிர்மண்டலமெத்தையுஞ்சொர்னசபேசன்த்வஜமரமும்
நாலுபுறத்திலுங்கோபுரமும் நவமணிச்சித்திரமண்டபமும்
சீலமுறுந்திருவீதிகளுந் தில்லைவேதியர்மாளிகையும்
கண்டேன்கலிதீர்ந்தேன் என் கவலையெல்லாமொழிந்தேன்
மண்டலம்புகழுஞ்சபேசன்சந்நிதி வாழ்த்திப்பணிந்துநின்றேன்
தஞ்சமென்றடைந்தே னிந்தச் சடலத்தால்நொந்தேனினியென்னை
அஞ்சவேண்டாமென் றொருதரஞ்சொல்லி யழைத்தாலாகாதோ
அப்பாவுன்சரணந் தில்லைக்கரசேயுன்சரணம்
ஒப்பாரில்லாநாடகம்பயிலு மொளியேநின்சரணம்.

கோபுரதெரிசனமென்கிற கீர்த்தனமுதற்கொண்டு

சிதம்பரவிலாசமெனப்படும்.

சிந்து.

சிவன்- வேடிக்கைதானென்று நாடிக்கொண்டே, அறியாது போலிருந்த - செம்பொன்
- னம்பலத்தாடியைக் கும்பிடவே, ஆதனூர் தனிலிருந்து - விடும் - அம்புபோ லப்புறந்