தையமின்றித், தில்லையருகில் வந்தார்-மனந்-தேறிக்கொண்டார்
குறையாறிக்கொண்டார்,
கெண்டாமணியோசை.
திருநாளைப்போவார் புராணம்.
விருத்தம்.
நாளைப்போ வேனென்று
நாங்கள்செலத் தரியாது
பூளைப்பூ வாம்பிறவிப் பிணிப்பொழியப்
போவாராய்ப்
பாளைப்பூங் கமுகுடுத்த பழம்பதியி னின்றும்போய்
வாளைப்போத்தெழும்பழனஞ் சூழ்தில்லை மருங்கணைந்தார்.
_________
வசனம்.
இது-பொழிப்புரை.
நாளைப்போவேனென்றுசொல்லி
அனேகநாள் கழியச் சபாநாதரைத்
தரிசனம்பண்ணவேண்டுமென்னும்
பேராசையை அடக்கக்கூடாதவராய்ப்
பூளைப்பூவையொத்த
நிலையாமையையுடைய பிறப்புக்களால் உண்டாகிய
சம்பந்தம்
நீங்கும்பொருட்டுப் போகின்றவராய்ப்
பாளையையுடைய பொலிவாகிய கமுகமரங்கள்
சூழ்ந்திருக்கும்
பழைமையுற்ற தம்முடைய ஊரினின்றும் புறப்பட்டு,
ஆண்வாளைமீனானது
எழும்பி விளையாடும் வயல்களையுடைய
சிதம்பரத்தின் எல்லையை அடைந்தார்.
ராகம் - கரகரப்ரியை ; தாளம் -
சாபு.
பல்லவி.
கெண்டா மணியாடுது-கண்டு பிணிவாடுது.
|