சரணங்கள்
முக்தி மணிதேடுது நாடுது
கூடுது (கெண்டா)
பரவச மாகுது பாவங்கள் போகுது (கெண்டா)
சனன மரணாதிகள் மோகமுந் தீர்ந்தது (கெண்டா)
__________
நொண்டிச்சிந்து.
கெண்டாமணியோசை-காதில்-கேட்குதென்றா
ரதைப் பார்க்கவென்றே,
கொண்டாட்டமாகிவந்தார்-கையைக்-கும்பிட்டேன்
நமக் கம்பிட்டதோ, என்றே
மனமகிழ்ந்தார்-திரு-வீதியிலேவந்து
காதலுடன், கண்டார்
களையாறி-இரு-கண்களிலானந்தம் பொங்கிடவே,
நின்றார் மதிற்புறத்தே
வெகு-நேர்த்தியென்றாரிதைப் பார்த்ததில்லை,
பணிந்தார் பரவசமாய்-நல்ல-
பாக்கியசாலிக ளாக்குமென்றார், இதுதானோ தில்லைப்பதி.
____________
வசனம்.
நந்தனார் தில்லையைக்கண்ட ஆனந்தானுபூதியைச்
சொல்லுகின்றார்.
தண்டகம்
ராகம் - மத்யமாவதி ; தாளம் - ஆதி.
தில்லைத்தலத்தைக் கண்டார் -
அது சித்விலாசமென்றார்-அந்த
எல்லையிலே நின்றார் - மன தேகமாக்கிக்கொண்டார்
இருகண்கள் நீர் வடித்தார் -
கொடுங் காமவலையையறுத்தார்
இருகையைத்தூக்கிக் குவித்தார் -
தன் காலைக்கோணிக்குதித்தார்-இந்த
|