திருநாளைப்போவார்138நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஐம்புலன்களை மறந்தார் - பர மானந்தக்கடலுறைந்தார்
தன்தேவபாவ மறந்தார் - தில்லைச் சிவனேயென்றிருந்தார்

ராகம் - ப்யாக் ; தாளம் - ஆதி.

பல்லவி.

இதுதானோ தில்லைத்தலம்-இத்தனைநாளுமறியேன்
இதுதானோ தில்லைத்தலம்.

சரணங்கள்.

அதுவோ யிதுவோவென் றலைந்திடும் பேயனைக்
கதிதரு வேனென்று கைகாட்டி யழைத்திடும் (இது)

காசினி யிலிதைக் கயிலையென் றெல்லோரும்
பேசக்கேட்டதேயன்றிப் பேணிப்பார்த் தறிந்திலேன். (இது)

ராகம் - அசாவேரி ; தாளம் - ஆதி.

பல்லவி.

ஆடியபாதத்தைத் தாரும் - உம்மைத்
தேடிவந்தேன் இதோ-பாரும் பாரும் (ஆடிய)

அநுபல்லவி.

நாடிப்புகழ்ந்துதொழும் சிவ காமிமனோகரரே தில்லை
நடராஜரே யுமது பதம்நான் விடமாட்டேன். (ஆடிய)

சரணங்கள்.

பாத்திரமல்லவோ பாலகிருஷ்ணன்பணி-பரனேசிதம்பர
க்ஷேத்திரதரிசனம் வீடுசேர்க்குமென் றறியேனோ-அணு
மாத்திரப்பொழுதும்மை மறக்கவென் மனதுவராதென்று-மருவி
தோத்திரம்பண்ணமாட்டேன் சுவாமி அதிலென்னசுகம் அம்பலந்தனில் (ஆடிய)