திருநாளைப்போவார்139நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

நந்தனார், தில்லையைக்கண்டு ஆனந்தங்கொண்டாடுவார்.

ராகம்-இந்துஸ்தான் காபி ; தாளம் - ஆதி.

பல்லவி.

தில்லைதில்லை யென்றால்பிறவி
இல்லையில்லை யென்று மறைபொழியும்.

அநுபல்லவி.

தொல்லைதொல்லை யென்றகொடுவினை
வல்லைவல்லை யென்றகலும் திருத் (தில்லைத்)

சரணங்கள்.

கற்றோங்கற்றோம் களங்கமறிந்திடப்
பெற்றோம்பெற்றோம் பேசாப்பெருமையில்
உற்றோமுற்றோம் பொன்னம் பலந்தனில்
தத்தோந்தத்தோம் என்றுநடனமிடும். (தில்லைத்)

வாடிவாடி மாலய னிருவரும்
கூடிக்கூடிக்கொண் டல்லும்பகலுந்தான்
தேடித்தேடித் திருவடிமுடிகளைப்
பாடிப்பாடிக்கோ பாலகிருஷ்ணன்தொழும். (தில்லைத்)

_________

துக்கடா.

ராகம் - தேசிகதோடி ; தாளம் - ஆதி.

பல்லவி.

இதுவோதில்லைச் சிதம்பரக்ஷேத்ரம் ஈசனிருப்பிடமோ.

சரணம்.

மதுரம்பொழிந்திடும்      மறையோரிருப்பிடம்
மாமுனிவர்தவம்         வாழும்பெருமிடம்
பதவிபெறுந்தொண்டர்    பணிந்துவருமிடம்
பலதெய்வமுந்தொழும்   பரகதிதருமிடம் (இது)

ராகம் - ப்யாக் ; தாளம் - மிச்ரஏகம்.

பல்லவி.

ஆடுஞ்சிதம்பரமோ-வையன் கூத்-தாடுஞ்சிதம்பரமோ.

சரணங்கள்.

ஆடுஞ்சிதம்பர மன்பர்களிக்கவே
நாடுஞ்சிதம்பரம் நமச்சிவாயப்பொருள். (ஆடுஞ்)