ஆருமறியாமல் அம்பலவாணனார்
சீரடியார்பார்க்கச் சேவடி தூக்கியே. (ஆடுஞ்)
பாலகிருஷ்ணன்போற்றும்
பனிமதிச்சடையினார்
தாளமத்தளம்போட தத்தித்தத்தெய்யென்று.
(ஆடுஞ்)
ராகம் - தன்யாஸி ; தாளம் - த்ரிபுடை.
பல்லவி.
திருவாதிரைதெரிசனத்திற்குவந்தேன்
- உந்தன்
திருவாதிரைதெரிசனத்திற்குவந்தேன்.
அனுபல்லவி.
திருவாய்திறந் துறவாயினி பிறவாவரந்
தருவாயென்று. (திரு)
|