திருநாளைப்போவார்141நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

கங்குகரையேது பவக் கரைதாண்டவேயுனது சிவ
கங்கைதனில்மூழ்கி பவக் கடலுங்குளப்படியாகவே. (திரு)

அல்லும்பகலுனது சபை அருகில்நின்றுகூத்தாடினால்
கல்லாமனமுருகும் பர கதியுங்கைவசமாகுமே. (திரு)

ஆலந்தனைக்கண்டோடி வமரர்துயர்கெடக்காத்தவன்
பாலகிருஷ்ணன்பணியுந் திருப் பாதங்கனகசபாபதியே. (திரு)

__________

அறுசீரடி யாசிரிய விருத்தம்.

தில்லையைக் கண்ட போதே தெளிந்ததென் னுள்ள மெல்லாம்
பல்லூழி காலஞ் செய்த பாழ்வினை தொலைந்து போச்சு
நல்லருள் நடனங் காட்டும் நாயனார் சிற்ச பைக்குள்
செல்லுவார் மகிமை செப்பச் சேடனா லாகா தன்றே.

___________

வசனம்.

இப்படித் தில்லையைக் கொண்டாடி இதைப் பாராதவரே பாவி யென்பார்.

ராகம் - நவரோஸ்  ; தாளம் - சாபு.

பல்லவி.

மார்கழிமாதத்தி லாதிரைநாளையில் வந்துசிதம்பர தேசிகனை
பாராதபாவிகட் கேதுமில்லையிந்தப் பாரில்வந்து பிறவாதவரே
வாளிற்றொடுந்திரு மாளிகைமண்டப மாமதிலுந்தில்லை மாநகரம்
காணக்கிடைக்கா தப்பா யிந்தபாக்கியங்
காதில்கேட்டவண்ணங் கண்டதுவே