திருநாளைப்போவார்142நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஆதிபராபர மாகியதில்லைப்பொன் னம்பலவன்வளர் சந்நிதியில்
நாதமுங்கீதமுங் கேட்குதுவானந்த நாடகவேளையை நானறியேன்.

__________

வசனம்.

நந்தனார் சிதம்பரங் காணாததாற் சிவலோகங் காணேனென்பார்.

கண்ணிகள்.

ராகம் - ஸாவேரி  ;  தாளம் - ரூபகம்.

சிதம்பரம்வந்து தரிசியாத ஜன்மம் வீணென்றுபேசி
மனதிலெண்ணினார் பாத கமலத்யானம் பண்ணினார்
பறையனுக்குமிந்தத்தலத்தைப் பார்த்தபின்புமோட்சபதவி
பலித்ததல்லவோ பாவிசெனனம் அலுத்ததல்லவோ
தொண்டுகொண்ட தங்களையர் பெருமையெல்லாஞ்சொல்லிச் சொல்லித்

துள்ளித்தாவினார் ஞானவிரையை அள்ளித்தூவினார்
பூதத்தினிலிதுவே தெய்வமென் றாநந்தக்கடலில்
பொங்கிப்பாடினார் புண்யத்தல மென்று தேடினார்.

தண்டகம்.

ராகம் - நவரோஸ்  ;  தாளம் - மிச்ரஏகம்.

அரகரசங்கர வண்ணலேயம்பலத்தரனே
நானுந்த னடைக்கலமென்று
      உருகித் துதியாரோ - ஆனந்தம்
      பெருகிப் பதியாரோ
முக்தியளிக்குந்திரு மூலத்தானரைக்கண்டு
பக்திபண்ணாதவன் பாமரனல்லவோ