முப்பாழுந்தாண்டி
மூலத்தீமூட்டிக்கொண்
டப்பாலேநின்றா லானந்தங்காணலாம்
ஒப்பா ரில்லையடா - ஊடுருவி
நிற்பா ரில்லையடா
ஆலமிடறடக்கி யம்பலக்
கூத்தன்கோ
பாலகிருஷ்ணன்தொழும் பரமசிவனேயென்று
பாடிப் படியாரோ -
பருவத்தில்
தேடிப் பிடியாரோ.
_________
வசனம்
நந்தனார் சிவபக்திபண்ணாதவனை
நிந்தனைசெய்து இன்னமுஞ் சொல்லுகின்றார்.
கண்ணிகள்
ராகம் - ஸு ரடி ;
தாளம் - சாபு.
வானோர் புகழ்தில்லை
வனநாதர்வாழும்
ஞானசபையைப்போற்றி நமச்சிவாய-வென்று
சொல்லாதவன் கல்வி
கல்லாதவன் வெகு-பொல்லாதவன்
காசினிபுகழ்சிவ காமவல்லியைக்கண்டு
பாசமகலும்நெறி பாராதவன்-சுத்தப்
பதராச்சு ஆட்டினதராச்சு
க்ருமிக்கெதிராச்சு
ஆட்டுக்காலைச்சற்றே கேட்டுவாங்கியுள்ளே
நாட்டிக்கொள்ளாதவன் மாட்டுக்குவமை-யென்று
நாடாரே கண்டுகூடாரே
என்றுந்-தேடாரே.
அம்பலவாணனா ரருகில் வந்துகையால்
கும்பிட்டிறைஞ்சாத குருடர்களுக்குத்-திற
மதியேது பரகதியேது பண்ணும்-விதியேது.
|