திருநாளைப்போவார்145நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

நாக்கிருந்துஞ்சிவ நாமத்தைநவிலாமல்
சாக்குப்போக்குப்பேசுஞ் சண்டியவனைக்-கால
     னடியானோ கட்டிப்பிடியானோ கையா-லிடியானோ.

வேதாந்தநூற்களை விவரித்துணர்ந்தாலும்
ஏகாந்தபத்தியொன் றில்லாதவன்-உள்ளம்
     உருகாது கள்ளங்கருகாது வெள்ளம்-பெருகாது

ஆத்திமதியஞ்சடை யழகனாடியகூத்தைப்
பார்த்துக்களிக்காத பாவிமனிதர்க் கொன்றும்
     பலியாது வினை சலியாது சீலம் பொலியாது (வானோர்)

பாலகிருஷ்ணன்தேடும் பாதரசத்தைக்கண்டு
சீலமுடனேயுண்டு ஜபிக்காதவன் துன்பம்
     தொலையாது இன்பம் நிலையாது கன்மம் கலையாது (வா)

_________

 வசனம்.

நந்தனார், சிதம்பரம் பாராத கண்படைத்தாரை முகத்தைக் கெடுக்கவந்த
புண்படைத்தவரென்று சொல்லுவார்.

ராகம் - நாதநாமக்ரியை  ;  தாளம் - சாபு.

காணாதகண்ணென்ன கண்ணோ
வீணானகண்மயில் கண்ணதுபுண்ணோ (காணாத)

சொல்லும்பொருளிறந்த துரியவடிவமாகி
யல்லும்பகலுமற்ற வானந்தப்பேரொளி (காணாத)

பசியாமருந்தளிக்கும் பரமரகசியத்தி
லசையாமலேயாடு மம்பலநாதனைக் (காணாத)