திருநாளைப்போவார்146நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஊராருமறியாம லொளிகண்டுபிசகாமல்
ஈராறுகாற்கொண்டு எழும்பியமண்டபம் (காணாத)

அண்டத்துளடங்காத வாசைவலையைப்பூட்டிப்
பிண்டத்துளடங்கிய பேரின்பத்தெப்பத்தைக் (காணாத)

நாசிநடுவிருந்து நாதனேதானென்று
பேசாமற்பேசிய பெருமையையொருநாளும் (காணாத)

என்னையானறியேனென் றிகழ்ந்திடும்பேயனைத்
தன்னந்தனியனாக்கித் தருவனென்றழைத்தாரைக் (காணாத)

சோற்றுத்துருத்தியிதைச் சுமந்ததினாலென்ன
ஆத்திமதியஞ்சடை யழகனமருங்கோவில் (காணாத)

சீலக்கமலமுகச் சிவகாமிமனமகிழ்
கோலக்கனகன்தில்லைக் குழகனாடியகூத்தைக் (காணாத)

பாலகிருஷ்ணன்தொழும் பாதத்தைப்பணிந்தொரு
நாளிலும்பிறவாத நலமிக்க வழிதேடிக் (காணாத)

___________

வசனம்.

நந்தனார், பக்திபண்ணாதவன் முக்திபெறானென்று சொல்லுகின்றார்.

தண்டகம்.

ராகம் - தன்யாஸி  ;  தாளம் - ஆதி.

வேதம்படித்தும் சாத்திரங்கற்றதும் மெய்யினில்நீற பூசுவதும்
ஆதிசிதம்பர தேசிகன்றிருவடிக் காளானாலன் றானந்தம்
உடனேதொலையும் பவபந்தம்
சொன்னேன் சொன்னேன் சொன்னேன்.