திருநாளைப்போவார்147நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஊணுறக்கமுத லாகியநான்கு முண்டேயுலகில் யாவருக்கும்
ஆணவமலத்தை நீத்தார்களறிவா ரகத்தைச்சுருக்கிக் கொள்ளுவரே
சகத்தைப்பொய்யாத் தள்ளுவரே
சொன்னேன் சொன்னேன் சொன்னேன்.
அருந்தவமாமுனி யாகிலும்நல்லா ராசைபொல்லாதா ரறிவாரோ
வருத்தப்படுத்தி மனத்தைமயக்கி வைத்திடுமன்ன மயக்கோசம்
உற்றுப்பார்த்தாவது நேசம்
சொன்னேன் சொன்னேன் சொன்னேன்.
அரவணைகோ பாலகிருஷ்ண னல்லும்பகலும் பணிந்தேத்தும்
திருவடிசரணா கதமென்றெண்ணித் தெளிந்தார்க்கன்றோ பரபக்தி
ஒழிந்தார்க்கன்றோ வரமுக்தி
சொன்னேன் சொன்னேன் சொன்னேன்.

___________

திருநாளைப்போவார் புராணம்.

விருத்தம்.

இப்பரிசா யிருக்கவெனக் கெய்தலரி தென்றஞ்சி
அப்பதியின் மதிற்புறத்தி னாறாத பெருங்காதல்
ஒப்பரிதாய் வளர்ந்தோங்க வுள்ளுருகிக் கைதொழுதே
செப்பரிய திருவெல்லை வலங்கொண்டு செல்கின்றார்.

_________

வசனம்.

நந்தனார், இந்தத் தில்லைவா ழந்தணர்களுடையவீடுகள் இத்தன்மையாயிருக்க,
எனக்கு அவ்விடத்திற்குப் போகுதலடாதெனப் பயந்து அந்தத் தலத்தின்
மதிற்புறத்திலிருந்து அளவற்ற பேரன்புடன் மனமுருகிக் கும்பிட்டுக்கொண்டு
சொல்லுதற்கரிய எல்லையை வலஞ்செய்கின்றார்.