விருத்தம்.
அம்மை யாந்தில்லை
மாநகர் மருங்கிடை யணைந்து
சும்மை விட்டிரு விழிகளில் நீரறச் சொரிந்து
விம்மி யேசிவ னார்சரி தங்களை விரித்துக்
கொம்மை கொட்டியும் பாடியு மானந்தங் கொண்டார்.
____________
வசனம்.
நந்தனார், தனக்கிந்தப்
பாக்கியங்கிடைத்ததென்று
கொண்டானடிக்கின்றார்.
ராகம் - ஹு ஸேனி ; தாளம் -
ரூபகம்.
பல்லவி.
கொண்டானடிக்கிறார்-தில்லைக்-கோயிலைக்கண்டு
தாவித்தாவிக் (கொ)
அநுபல்லவி.
அண்ட ரண்டந்தொழு மம்பல
நாதனைக்
கண்டாரைக்கண்டுகொண்டோமென்றுநன்றாய்க்
(கொ)
சரணங்கள்.
அஞ்சலிகொண்டு களித்து
அரகரவென்று ஜபித்து
குஞ்சிதபதத்தைத் துதித்துக்
குரவைகள்பாடிக் குதித்துக் (கொ)
அங்கம்பரவச மடைந்து
ஆனந்தக்கடலில் விழுந்து
பொங்கிச்சிவமென் றறிந்து
புவியதிர்ந்து பணிமிகுந்து (கொ)
இருகண்களில் நீர்பெருக
இறைஞ்சிமன தூடுருக
அருமைச்சிவகதி தருக
அம்பலவாணன் வருக (கொ)
__________
|