இதுவுமது.
ராகம் - சௌராஷ்ட்ரம்
; தாளம் - ஆதி.
பல்லவி.
கொண்டானடித்தாரே-நந்தனார்
கோவிலைக்கண்டு தாவித்தாவிக் (கொ)
அநுபல்லவி.
அண்டாமகிழ்ச்சியாலே-அரனேயென்றுமென்மேலே
(கொண்)
சரணங்கள்.
பண்டுநான்செய்ததே
யோகம் - அதனாலுருக்
கொண்டுவந்தேன்மானிட தேகம் -
ஆகவேயிந்தப்
புண்டரீகப்பதவை
போகம் - கண்டேனென்போல
மண்ணிலெவர்க்குண்டு
யோகம் - என்றுதுதித்துக்
கொண்டாடுமிவர்புகழைக்
கூறுவதுவேயுற்
சாகம் (கொண்)
வஞ்சகமனத்தையொரு
மித்து - நினைத்தொழாத
பஞ்சமாபாதகப்பேரெ
டுத்து - உலுத்தர்களைக்
கெஞ்சியேயவர்களைய டுத்து -
உழலாமலே
கஞ்சமலர்ப்பதங்கொ
டுத்து - ஆண்டருளென்று
வஞ்சிசிவகாமிதொழும்
மணவாளனைத் துதித்துக் (கொண்)
ஒருநாற்புறமதில்
சொலிக்க - ஊரெல்லைசுற்றி
வருவார்திரும்புவார்
களிக்க - சிரசின்மேலே
இருகைகுவித்துவாழ் வளிக்க -
வேண்டுவாரிந்தக்
திருநாளைப்போவார்தான்மிகுக்க
- ஆகையாலிந்தப்
பெருவாழ்வடைவாரிவர்
பேதமில்லை
யுரைக்கக் (கொண்)
|