நூற்புலமையாண்ட தொழிலனா
யத்திலொப்பிய நந்தனாரென் றொருவருண்டாயிருக்கும்
புலைப்பாடியில் பரமநாபன்
பாதாரவிந்தத்தில் மிகுந்த அந்தரங்கம்
பொருந்தியவராகிய
நந்தனார் மிகுந்த
பக்திபுரிந்திருந்தார். ‘வீச்சுடன்
சேற்றில் விழுந்தாலும் பிள்ளைப்பூச்சி
மேலொட்டாது.’
அத்தன்மைபோல், எத்தனை காரியமிருக்கினும்
முக்தி அளிக்குங்
கர்த்தனாகிய அத்தனை
தனது சுத்தமாகிய சித்தத்தால் நித்தமும் வைத்து
உத்தமபக்தி
பெற்றிருந்தார், மற்றது
துறந்தார், உற்றது முணர்ந்தார். இப்படியெல்லாமிருந்தும்,
குலகுண
மில்லாமற்போனால்
உலகம்
பொல்லாங்கு சொல்லுமல்லவா? இவர்,
நொண்டிச்சிந்து.
ராகம் - புன்னாகவராளி; தாளம்-மிச்ர
ஏகம்.
வெகு-நல்லவராமிந்தத்
தொல்லுலகில்
அவரே சிவனடியார்
வசனம்.
என்று ஆச்சரியங்கொண்டு
சொன்னபடியினாலே, இவரைப்போல பக்திமார்க்கத்தில்
மிகுந்தவராயிருந்தவர்
யாரிருக்கிறார் யாரிருப்பார் என்று இணைசொல்லப்போகா
தணையடைந்த பரமசிவ பக்திமானென்று சொல்லப்படும்.
ஆகையால்,
நொண்டிச்சிந்து.
ராகம்-புன்னாகவராளி; தாளம்-மிச்ர
ஏகம்.
அவர்க்-காருமெதிரில்லைத்
தாரணியில்
கோடிகோடி ஜன்மங்களோ
|