வசனம்.
இப்படி நந்தனார்
வீதியைச்சுற்றிச் சந்நிதிமுன் வந்து
தண்டாகாரமாய் விழுந்து
பணிந்து புழுதிபடப்
புரண்டு ஆனந்தமடைந்து நிருத்தசபை தெரிந்து
தரிசனம்பண்ணுவார்.
ராகம் - ஸ்ரீராகம் ; தாளம் -
ஆதி.
பல்லவி.
சபாதரிசனங்கண்டான்-நந்தனுஞ்-சுபாவமுடனேநின்றான்.
அனுபல்லவி.
சபாதெரிசனங்கண்டான்-அகணித
ப்ரபாவமாகிய சபாபதியிருக்கும் (சபா)
சரணங்கள்.
சதாகாலமும்வே தங்கள்மொழிந்திடுஞ்
சிதாகாரமாய்ச் செழித்துவளர்ந்திடும் (சபா)
தில்லைமூவாயிர முனிவர்கள்கூடும்
அல்லும்பகலு மவரவர்நாடும் (சபா)
__________
வசனம்.
நந்தனார், தெற்குக்
கோபுரவாயிலினின்று சபாபதியை நோக்கித்
துதிபண்ணுவார்.
ராகம் - ஜிங்ல ; தாளம் -
ஆதி.
பல்லவி.
ஜயஜகதீசா-அதி சுந்தரகுஞ்சிபாதா-ஓ-ஜயஜகதீசா.
|