திருநாளைப்போவார்152நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வீதியில்வந்தே                 னாகாதோ
பாதகஞ்செய்யினுஞ்             சிதம்பரமென்று
பகர்ந்தால்பழைவினை          போகாதோ
தீதில்லாதபெருந்தவத்தோர்      வந்தால்
தெரிசனஞ்செய்வேன்           போதாதோ
ஆதிபராபர மாகியவுனைக்கொண்  டாடுவேன்
பாடுவேன் தேடுவேன்            நாடுவேன் (ஜய)

அபாரமாகியசம்சாரம்             சதாவிஷயகரமதிகோரம்
உபாயமறிந்துகரைப்யேறப்        படாதுஜெகதீசுவரமாயா
விலாசகற்பிதமிந்தஜகம்          அனேகசஞ்சிதவாசனைகள்
சிவோகமென்கிறபாவனையால்    நிவாரணம்பண்ணும்பெரியோர்கள்
பண்ணியதொழிலின்              பயனறிவார்
பாலகிருஷ்ணன்தொழுங்          கழலணிவார்
எண்ணியபடியே                 தவம்புரிவார்
எனதுனதென்று                 முறையிடுவார்
சமாதிபண்ணிக்ரமாதி             க்ருத்தியம்
படாதபேதைகைவிடா           தேயும் நீர்
சபாபதிவெகு                   கிருபாநிதிவுன்
பிரதாபமறியேன்                சுபாவம்பறையன். (ஜய)

விருத்தம்.

வாட்டு வாருடல் வேர்படத் தழலிடை வருத்தி
மூட்டு வார்மூலக் கனல்மதி மண்டல முகட்டில்
மாட்டி றைச்சியை யருந்திய புலையன்றன் மனத்துள்
ஆட்டுக் கால்சற்றே தந்திடு மம்பலத் தரசே.

ராகம் - இந்துஸ்தான்காபி  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

தாதாதாநீயாடியபாதம் தத்தித்தெய்தத்தித்தெய்யென் றாடியபாதம்.