திருநாளைப்போவார்153நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

ஆதரவாகப் பதஞ்சலிமாமுனிக் கானந்தநாடாக மாடுந்திருவடி (தா)
ஆகமவேதபு ராணங்களோதிய யோகிகளாலே தேடுந்திருவடி (தா)
சிந்தைமகிழ்ந்து குவிந்திடவேயதி சுந்தரரஞ்சித குஞ்சிதபாதம் (தா)
பாரளந்திடுங்கோ பாலகிருஷ்ணன்துதி பாடிப்பரவிப் பணியும்பாதம் (தா)

ராகம்- ரீதிகௌள  ;  தாளம் - ஜம்பை.

பல்லவி.

தாண்டவதரிசனந்தாரும்-தாமதம்பண்ண
வேண்டாம்-இதுசமயம். (தாண்)

அனுபல்லவி.

ஆண்டவனேயுன்பெருமையை யாரறிந்துரைசெய்வார்
நம்பியிருக்கிறேன்பேதை யெந்தனுக்கொருதரம் (தாண்)

சரணங்கள்.

ஆசைவலைக்குள்தங்கிப்பொங்கி மயங்கித்தடுமாறிமும்மதங்கள் மீறி
யானெனதென்றுரைக்கும் பாசமகலநெறிநிறுத்திட
மாயவன்கோபாலகிருஷ்ணன் பணிந்திடும்உன்திருவடி
தாரிதகுகுஜெம் தரிதகணந்தரி திரிகுதிரிகுதீம்தீம் தக்கிடத்தக தோமென்றாடிய (தாண்ட)

__________

வசனம்.

நந்தனார், பிறவிப்பிணிக்கஞ்சித் துதிபண்ணுவார்.