லாவணி.
ராகம் - குரஞ்சி ; தாளம்-
ஆதி.
அம்பலவாணாவுன்னைச்
சரணமடைந்தேனானேழை
ஆதரித்தாளுவதுன்பாரமல்லவோ சொல்லவோ
எடுத்திடுஞ்சனனங் கணக்கெழுதத்தொலையாதென்பாடு
இன்னமும்பிறந்திடுவேனோநடேசனே
யீசனே
ஆசையெனும்பெருங்காட்டிலே யரற்றும்முழுமூடன்
அகலவிடாதேயும்நம்பினேனுன்னை யையனே மெய்யனே
பாரளந்தகோபாலகிருஷ்ணன் தினம்பணியுமலர்ப்பாதம்
பாவியென்னுள்ளுறவேகருணை பாருமே
வாருமே.
__________
வசனம்.
அம்பலத்திலாடும் நடனத்தை
வர்ணித்துச் சொல்லுவார்.
ராகம் - சங்கராபரணம் ;
தாளம் - சாப்பு.
பல்லவி.
ஆடியபாதா-இருவர்கள்-நாடும்வினோதா.
(ஆடிய)
அனுபல்லவி.
ஆடியபாதா வயனுமாலுந்தினம்
தேடியுங்காணாமற் றிரைமறைவாகத்
தித்தித் தித்தித்
தித்தித்தியென் (றாடிய)
சரணங்கள்.
வீரவெண்டையஞ்சிலம்பசைந்திட
மேவுஞ்சடையம் புலியசைந்திடச்
சாருந்தொண்டர்கள்
மனங்குவிந்திடச் சாலோகாதி பதவியுந்
தந்தோந் தந்தோந் தந்தோந்
தந்தோமென நடனம் (ஆடிய)
|