வேதமுனிவர்கள் பாடவுஞ் சன
காதியோகிகள் கூடவும் வெகு
ளதமெங்கினு மூடவுந் திரு நந்திமத்தளம் போடவுந்
தகுந் தகுந் தகுந் தகுமென்று நடனம். (ஆடிய)
பாலகிருஷ்ணன் துதிகள்செய்திடப்
பண்ணவர் பூமாரிபெய்திடச்
சீலமுளசிவகாமி மகிழ்ந்திடத்
திருச்சிற்றம்பலத் தரசனுந்
தாந் தாந் தாந் தாந் தாநீ
தாமென்று நடனம் (ஆடிய)
வசனம்.
நந்தனார் அடிமைத்திறங்காட்டிச்
சொல்லுகின்றார்.
தண்டகம்.
ராகம் - நவரோஜ் ; தாளம் -
ஆதி.
அறிந்தறியாமலேசெய்த
தபராதமையா-என்னை
ஆண்டவனேதில்லைத்தாண்டவராயா அடிமையுன்சரணம்
பருகியவண்டபகிரண்டங்கள் கடந்திடு மத்தாவுன்சரணம்
பதஞ்சலிக்காகநடம்புரியுந்திரு வம்பலக்கூத்தாவுன்சரணம்
நடுவுமாதியுமந்தமுமொன்று மிராதநிராமயனேசரணம்
பொங்குமாநந்தக்கடலேவொளியே பொறியின்னறிவேயுன்சரணம்
என்றும்நித்தநிரஞ்சனநிஷ்கள நிர்க்குணரூபாவுன்சரணம்
கருதிநின்மகிமைகண்டோரறியாத கடையேனுன்சரணம்
எள்ளுக்குளெண்ணெய்போலெங்குநிறைந்த வீசாவுன்சரணம்
எட்டிரண்டுமறியாதவன்கனக சபேசாவுன்சரணம்.
___________
வசனம்.
நந்தனார், இப்படி
யனேகவிதமாய்க் கொண்டாடி உட்புகுந்து தாண்டவம்பாராத
மனக்குறைவுகொண்டு சுவாமியை
நானுள்ளே வரலாமோவென்று கேட்கின்றார்.
|