ராகம் - மாஞ்சி ; தாளம் -
சாபு.
பல்லவி.
வருகலாமோவையா
உந்தன்
அருகில்நின்று கொண்டாடவும்
பாடவும்நான் (வருக)
அனுபல்லவி.
பரமகிருபாநிதி
யல்லவோ இந்தப்
பறையனுபசாரஞ் சொல்லவோ
உந்தன்
பரமா நந்தத் தாண்டவம்
பார்க்கவேநா னங்கே (வருக)
சரணங்கள்.
பூமியில்புலையனாய்ப்பிறந்
தேனே-நான்
புண்ணியஞ்செய்யாமலிருந் தேனே-என்
சாமியுன்சந்நிதி வந் தேனே-பவ
சாகரதுக்கமிழந் தேனே-கரை
கடந்தேனே சரண மடைந் தேனே-தில்லை
வரதா பிரதாபமும் பாபமுந்
தீரவே-நான் (வருகலாமோ)
_________
வசனம்.
இப்படி நந்தனார் தில்லையில்
வந்து கொண்டாடிப் பின்பு பக்தி மார்க்கத்தை
யெடுத்துப் பேசுகின்றார்.
சிந்து.
இதுதானோதில்லைப்பதி-என்று-எக்கலித்தாராடிக்
கொக்கலித்தார்
ஐயாவுன்சந்நிதியைக்-காண-வாசைகொண்டுவந்தே
னேசமுடன்
தெருவில்பொடித்தூளை-அள்ளித்-தேகமுழுதிலுந் தாகமுடன்
தரித்தார்திருநீறாய்-நாலு-சாஸ்திரவேதங்கள்
பார்த்துணரும்
பெரியோரிருக்குமிடம்.
|