திருநாளைப்போவார்157நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

நந்தனார், தில்லைத்தலம் இப்படியிருக்கிறதென்று சொல்லுகின்றார்.

தண்டகம்.

ராகம் - செந்தக்கடுக்கா  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

ஆகாதாகாதையே-இங்கிருக்க லாகாதாகாதையே.
ஆகமங்களுறை வேதியர்கள்சிவ னடியார்கள் கூட்டம் - மன
தேகமாகியெப் போதும்விளைகின்ற யோகிமுனிக ணாட்டம் - பூ
லோகமிதுகை லாசமென்றுமிதைப் போற்றுவார்க ளாட்டம் - அதி
வேகமாகவெங்கேயாகினும்வெளியே போகவேணுமையேஇருப்ப
தாகா தாகாதையே-இங்கிருக்க-லாகாதாகா தையே
பாவிப்பறையனிங்கே வரலாமோ சுவாமிதரிசனந் தரலாமோ
பாதகமலங்களைத்தொடப் போமோ
பாவமெனைப்பிரிந்துதொலை போமோ-இருப்ப
தாகாதாகாதையே-இங்கிருக்க-லாகாதாகா தையே
வேள்விசெய்யும்புகை மேலுல கெழும்பிப் போகுது
புண்ணியர் புரியுந்தவமுடன்
அரகரசிவனென்று ஆடிப்பாடிக்கொண்டு
பரிவுடனுனை ப்ரதட்சணம்வருமிடம்-ஆகாதாகா தையே
மணியாடுது வெகுசனங்கூடுது வீதி வலமாகுதுதிருப் பதம்பாடுது
உள்ளே நடமாடுது பணி விடைபோகுது பர வசமாகுது
மெத்தப் பயமாகுது இங்கே-ஆகாதாகாதையே
தீண்டாதே இங்கே வேண்டாதே சும்மா
யிறையாதே இங்கே தரியாதே என்னைப்
பாராதே படியேறாதே உள்ளே போகாதே வரலாகாதே
யென்பார்-ஆகாதாகாதையே.