சிந்து.
பெரியோரிருக்குமிடம்-இந்தப்-பேயனிருப்பது
ஞாயமல்ல
நானோபறைச்சாதி-தில்லை-நாதன்தரிசன மாதரவாய்ப்
பண்ணாப்படுபாவி-இந்தப்-பாரிலிருப்பது
சீரலவே
என்றேகுளத்தோரம்-புக்கி-ஏங்கிநின்றார்துயர்
நீங்கிநின்றார்
ஓயாப்பெருங்கவலை-கொண்டு-உள்ளங்குழைந்திட
வெள்ளமெனக்
கண்ணீர்கரைபுரள-இரு-கைதொழுதாரவர் மெய்தொழுதார்
கீழேபுரண்டழுதார்.
திருநாளைப்போவார் புராணம்.
விருத்தம்.
செல்கின்ற
போழ்தந்தத் திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந் தீவளர்த்த பயில்வேள்வி யெழும்புகையு
மல்குபெருங் கிடையோது மடங்கணெருங்
கினவுங்கண்
டல்குந்தங் குலநினைந்தே யஞ்சியணைந் திலர்நின்றார்.
____________
வசனம்.
திருநாளைப்போவார்
சிதம்பரத்துக்குப் போனபொழுது அதனெல்லையைக்
கண்டு
நமஸ்கரித்து எழுந்து விருத்தியாகச் சிவந்த
அக்கினியை வளர்த்து ஆகுதி செய்கின்ற
யாகத்தால் உண்டாகிய புகையையும் மிகுந்த
பிராமணர்களின் கூட்டம், வேதம் ஓதுகின்ற
திருமங்களையுங் கண்டு குறைவாகிய தம்முடைய
குலத்தை நினைந்து உள்ளேபோவதற்குப்
பயந்து நின்றுவிட்டார்.
|