திருநாளைப்போவார் புராணம்.
விருத்தம்.
நின்றவரங் கெய்தரிய
பெருமையினை நினைப்பார்முன்
சென்றிவையுங் கடந்தூர்சூ ழெயிற்றிருவாயிலைப்புக்கார்
குன்றனைய மாளிகைக டொறுங்குலவும் வேதிகைகள்
ஒன்றியமூ வாயிரமங் குளவென்பா ராகுதிகள்.
__________
வசனம்.
சிதம்பரத்தெல்லையில்
நின்றுகொண்டிருந்த திருநாளைப்போவார் தாம்
உள்ளேயடையக்கூடாத அக்கோயிலின் பெருமையை
நினைப்பாராகி, முதலில் அந்த
எல்லையைக்
கடந்து ஊரைச் சுற்றியிருக்கும் மதிலின் திருவாயிலை
யடைந்தார். அங்கே
திண்ணைகள் பொருந்திய மலைகள் போலுயர்ந்த
மூவாயிரம் வீடுகள்தோறும் ஹோமங்கள்
செய்யப்படுகின்றன வென்று சொல்லிக்கொள்ளுவார்.
சுவாமியைப் பூசிக்கின்ற
தில்லைமூவாயிரவருடைய மாளிகைகள் மூவாயிரமென்றார்.
வேதவிதிப்படி
ஆகுதிசெய்யும் பிராமணர்களுடைய வீதியில் தாம் போகக்கூடாதபடியால், அதை நினைந்து
தன் குலத்தை யிகழ்ந்து
இங்கிருக்கலாகாதென்று அவ்விடம்விட்டு ஒரு
குளத்தருகில்
வந்து ‘சுவாமி உன்னைப் பாராத
ஜன்மத்தை யேன் படைத்தா’யென்று தரையில்
விழுந்து
புரண்டழுவார்.
ராகம் - ஸரஸாங்கி ; தாளம்
- ரூபகம்.
பல்லவி.
இந்தச்சடலம் வந்தவா
றேதென்றறிகிலேன்-நான்
ஏதென்றறிகிலேன்.
|