திருநாளைப்போவார்16நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

முன்னங்-குற்றமறச்செய்த நற்றவமே
அவதாரமானதுவோ
ஈசன்-அன்புபுரியும் பேரின்பசுகம்
கொள்ளைகொள்ளவோ பிறந்தார்
திருக்-கோவில்வலம்வந்தாராவலுடன்
செய்யும் பணிவிடைகள்.

பெரியபுராணச் செய்யுள்.

விருத்தங்கள்.

ஊரில்விடும் பறைத்துடவை யுணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார் தலைநின்றார் தொண்டினாற்
கூரிலைய முக்குடிமிப் படையண்ணல் கோயிறொறும்
பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்
போர்வைத்தோல் விசிவாரென் றினையனவும் புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கு நிலைவகையாற்
சேர்வுற்ற தந்திரியுந் தேவர்பிரா னர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ சனமுமிவை யளித்துள்ளார்.

வசனம்.

இந்தப்பிரகாரம் நந்தனார் சிவஸ்தலங்கள்தோறும் போய் சுவாமியைத்
தோத்திரஞ்செய்கிற தெப்படியென்றால்,

கண்ணிகள்.

ராகம்-காம்போதி; தாளம் - ஆதி.

செந்தாமரைமலர் சூழோடைமேடை
    செறிந்தமாதர்க ளாட்டம்-சிறந்தவேளூர்
எந்தைபிரானபி-டேககோரோசனை
    ஈந்தொழிந்தார் மனவாட்டம்