அனுபல்லவி.
சந்ததமுந்தில்லை
யம்பலத்தானைச்
சிந்தித்துமாயச் சிக்கறுக்காமல் (இந்தச்)
சரணங்கள்.
அங்கமலங்களைப்
போக்கிடுஞ்சிவ
கங்கையிலாடிக் களங்கமறாமல் (இந்தச்)
ஆடும்நடனங்கண் டானந்தமாகிப்
பாடிப்படித்துப் பணிந்துகொள்ளாமல் (இந்தச்)
அஞ்சக்கரத்தை யெடுத்துருவேற்றி
வஞ்சப்பிறவியின் மயக்கறுக்காமல் (இந்தச்)
பாலகிருஷ்ணன்றொழும்
பாதத்தைக்கும்பிட்டுச்
சீலமுள்ளமுத்தி சித்திபெறாமல் (இந்தச்)
ராகம் - கமாஸ் ; தாளம் -
திச்ரஏகம்.
பல்லவி.
கனகசபேசன்சேவடி
நான்கண்டதில்லை - தில்லைக்
கனகசபேசன்சேவடி.
அனுபல்லவி.
கனகசபாபதியைக் கண்டபேரைக்
கண்டால்போதும்
சனனமரண
மோகந்தீர்ந்து-சிவனைச்சேரவே. (கனக)
சரணங்கள்.
மானிடசாதியில்பிறந்து
மங்கயர்மோகத்தில்விழுந்து
தானுந்தவமுறையிழந்து
தன்னரசுநாடாய்த்திரிந்து (கனக)
|