திருநாளைப்போவார்161நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தகணகஜெம்தரி நம்தரி தோந்தோம் தரிகிடதாதா
ததிமிதகிடஜெணு கிடதக ததிகண தோமென்றாடிய-தில்லைக் (கனக)

அல்லும்பகலுமிந்த விஷயானந்தத்தில்மூழ்கி
அறிவுகெட்டமாடதுபோல் ஆனதுபொய்யோ
பல்லுயிரிலும்நிறைந்த பரமசிவஞானிகளே
பார்த்ததில்லைகேட்கும்தில்லைக்கோபாலகிருண்ணன்கவிபாடிக் (கனக)

_________

ராகம் - தந்யாசி  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

கனகசபாபதி-தரிசனம் ஒருநாள்-கண்டால் கலிதீரும்.

அனுபல்லவி.

ஜனகமகாமுனி கைதொழுதேத்திய
தினகரகோடி தேஜோன்மயமாகிய (கனக)

சரணங்கள்.

மனதிலொடுங்கியகல்மிஷம்         போக்கும்
   மாயப்பிணியதனைமறுவடி        வாக்கும்
ஜனனமரணசமுசாரத்தை             நீக்கும்
   திருவடிநிழலிலேகூடிய         யார்க்கும் (கனக)

சுருதிமுடிகளிலுஞ்சொல்லிக்கொண்   டாடும்
   தூயவெளியையொளியாகவே     கூடும்
தருமநெறியுந்தவறாதுள              நாடும்
   ததிங்கணதோமென்றுதாண்டவ      மாடும் (கனக)

பற்பலயோசனைசெய்வதுந்           தொல்லை
   பரகதியடையவுபாயமு            மில்லை