சென்றுநடன-தரிசனம்பண்ணாமற்
போச்சுதே
பறையனென்றஜன்மம்
போகுமோ-பாழ்
வினையாவின்னம்-பாரில்வந்துபிறக்க
லாகுமோ
அடிமையென்றுவந்தே
னுய்யுமோ - ஒன்றையும்
நானறியே-னம்பலத் தெய்வமென்ன
செய்யுமோ
பார்த்ததெல்லாமழிந்து
தோணுமோ-கோ
பாலகிருஷ்ணன்-பணியும் பரமன் கருணை வேணுமோ.
****** ஙு
******
வசனம்.
சிதம்பரதரிசனம் கண்டபேர்க்கு
ஜன்மமில்லை யென்பார்.
ராகம் - மோகனம் ; தாளம் -
ரூபகம்.
பல்லவி.
தரிசனங்கண்டார்க்கு
மறுஜன்ம
மில்லை
வரிசையுடனம்பலவன் வாழ்கின்ற
தில்லைத் (தரி)
சரணங்கள்.
இரவுபகலிடைவிடாதேசரண
பத்தி
இன்பமுறுமானந்தம் பொங்கிவரும்
நத்திப்
பரவிவருமவனருகி லணிமாதி
சித்தி
பணிந்துவந்துசிற்றம் பலத்தைவலஞ்
சுற்றித் (தரி)
சொர்ப்பனமென்றிவ்வுலகம்
தோன்றிவரும் வேதம்
சொன்னததுநீயென்ற படியாகும்
போதம்
அற்புதமிருதங்கமொடு தாளவகை கீதம்
அனவரதந்திருநடன மாடிவரும் பாதம்
(தரி)
|