திருநாளைப்போவார்164நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அல்லும்பகலோயாது அடியார்கள் கோஷ்டி
    அரகராவென்றமிர்த பானமதைப் போட்டித்
தில்லைவாழந்தணர்கள் கைபிடித்துக் கூட்டித்
    சிக்கெனவேதிரைதிறந்து பரவெளியைக் காட்டித் (தரி)

நஞ்சுண்டகண்டனுக்குக் கொன்றைமலர் சாற்றி
    நல்லதிருச்சாந்தணியு மம்பிகையைப் போற்றி
குஞ்சிதபதந்தனது மனத்திலுரு வேத்திக்
    கோபாலகிருஷ்ணன்றொழும் நடராஜ மூர்த்தி (தரி)

__________

வசனம்.

நந்தனார், தனக்குத் தரிசனங்கொடுக்க அம்பலவாணர் எப்போது வருவாரோவென்று
விசாரப்படுவார்.

இராகம் - ஜஞ்ஜூடி  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

எப்போவருவாரோ எந்தன்கலிதீர எப்போவருவாரோ.

அனுபல்லவி.

செப்பியதில்லைச் சிதம்பரதேவன் (எப்போ)

சரணங்கள்.

நற்பருவம்வந்து நாதனைத்தேடும்
கற்பனைகள்முற்றக் காட்சிதந்தாள (எப்போ)

அற்பசுகவாழ்வி லானந்தங்கொண்டேன்
பொற்பதத்தைக்காணேன் பொன்னம்பலவாணன் (எப்போ)

பாலகிருஷ்ணன்போற்றிப் பணிந்திடுமீசன்
மேலேகாதல்கொண்டேன் வெளிப்படக்காணேன் (எப்போ)