துக்கடா.
ராகம்- ஜஞ்ஜூடி ; தாளம் -
ஆதி.
வருவாரோ அருள்
புரிவாரோ-எந்தன்
மனதுசலிக்குது நானென்னசெய்வேன்
அரகரசங்கர வம்பலவாணன்
ஆதரிக்காதிருப்பாரோ ஒருகால்
(வருவாரோ)
_________
வசனம்.
நந்தனார், தான்
சின்னசாதியானதால் வருவாரோ வாராரோ வென்று
சஞ்சலப்படுவார்.
ராகம் - ஸு ரடி ; தாளம் -
ஆதி,
பல்லவி.
வாராமலிருப்பாரோ-ஒருநாள்-வருவாரோவறியேன்.
சரணங்கள்.
பாராமலிருப்பேனோ
பதஞ்சலிமுனிக்குப்பொற்
பாதங்கொடுத்தபர மேசுவரனானென்று
(வாராம)
கனவினில்வந்து கழனிமுழுதும்நட்டு
மனதுமகிழ்ந்தென்னை
வாவென்றுசொன்னவர் (வாராம)
கலக்கமறவேயவர்
காலுக்குக்கும்பிட்டுக்
குளத்தங்கரையில்நின்று
கூப்பிடும்வேளையில் (வாராம)
அல்லலறுத்துப்பர மானந்தமேதருந்
தில்லைத்தலத்தைக்கண்டு
தெரிசனம்பண்ணியும் (வாராம)
|