திருநாளைப்போவார்166நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

நந்தனார், இதுவரையில் வாராதபடியால் இனிமேல் தில்லைத்தலத்தை விடாமற்
சுற்றிவந்து தேகத்தைத் தள்ளுவோமென்று நிச்சயம்பண்ணுவார்.

ராகம் - ஜஞ்ஜூடி  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

இன்னம்வரக்காணேன்-என்னசெய்குவேனவர் (இன்ன)

சரணங்கள்.

இன்னம்வரக் காணேன்தில்லைப் பொன்னம்பல வாணன்பண்ணைநட்
டென்னையங்கேவாவென்று சொன்னவர் மறந்தாரே (இன்)

சொல்லும்பொருளுமிந்தச் சோதியேமகிழ்ந்துவாழுந்
தில்லையைவிடாமற்சுற்றித் தேகத்தைமாற்றிக்கொள்வது நன்று (இ)

பாலகிருஷ்ணன்போற்றும்-பாதச்சிலம்புகுலுங்கக்
கோலமுடனடனங்கண்டேன்-குறைகள்தீர்ந்ததென்று சொல்லவுந்தான் (இ)

____________

வசனம்.

நந்தனார், இப்படிச் சொல்லிக்கொண்டு கண்ணீர்சொரிந்து புரண்டழுவார்.

சிந்து.

கீழேபுரண்டழுவார்-ஒன்றுங்-கேள்விமுறையில்லையோநாதா
வென்றேதலைகுனிவார்-எந்தன்-வேதனையைக்கண்டாதரிக்குந்
தெய்வங்கிடையாதோ-பாவி-சித்தந்தெளிய விரத்திதந்து
வாவென்றழையாரோ-விண்ணில்-வானவர்கள் போற்று மூனமிலாக்
கனகசபைநடனங்-கண்டு-காயங்களித்திட நானடியேன்
வருந்தித்துதியேனோ-எந்தன்-வாணாளுருகுது வீணாக
அடடாவி தென்ன ஜன்மம்.