விருத்தம்.
சாதி பேதமுங் குணங்குறி
யாவையுந் தள்ளி
ஆதி யாகநான் கூவினேன் திசைதனி லணைந்தும்
மாத வம்புரி தொண்டர்கள் பணிதிரண் மறைக்கத்
கோதிலா வொரு தொண்டுமிப்
பாவிக்குக் குறையோ.
வசனம்.
நந்தனார், சுவாமி
உன்னைச் சரணாகதனென்று நம்பி வந்து துன்பப்படலாமோ,
சிவனே சிவனேயென்று பெருங்குரலிட்டுத் தனக்குஜன்மம் போதும்
போதுமென்று
சொல்லுகின்றார்.
ராகம் - நாதநாமக்ரியை ;
தாளம் - ஆதி.
பல்லவி.
போதும்போதுமையா-எடுத்தஜன்மம்-போதும்
போதுமையா.
சரணங்கள்.
மாதவமுனிவர்கள்
வந்திக்குந்தில்லை
வனத்திலனுதினமும் வளருமம்பலவா
(போது)
கோத்துதெளியும்புழு
வூத்தைநரம்புகளும்
நாத்தமலங்களூறு
மூத்திரக்கும்பியும் (போது)
சந்ததமடியேன் யந்திரம்போலே
வந்தெழுவகையிலும்
நொந்துமிகுந்தேன் (போது)
கொழுக்க ஆணிகள்போலே
யுறுத்தும் கொடியவன்னை
வயிற்றிலிருந்துபடும்
வருத்தமென்னசொல்வேன் (போது)
மாதர்கள்மீதினில்
மையல்கொண்டேங்கியுள்
வேதனைகொண்ட வெறும்பயலானேன்
(போது)
|