திருநாளைப்போவார்168நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அண்ணல்கோபால கிருஷ்ணன்பணியுந்திரு
வம்பலமேவும்பொன் னம்பலவாணா (போது)

_________

வசனம்.

ஜன்மமே கஷ்டம், அதிலும் புலையனாய்ப் பிறப்பது மிகவும் நஷ்டம் என்று
நந்தனார் சொல்லுகின்றார்.

ராகம் - கரஹரப்பிரியா ;  தாளம் - ரூபகம்.

பல்லவி.

இந்தஜன்மம்வேண்டாம்-இனி எந்தஜன்மம் வந்தாலும்வரட்டும்

அனுபல்லவி.

நந்திநடுவினில் மந்திரங்கள்சொல்லி
    வந்தனைகள்செய்து சிந்தைமகிழாத (இந்த)

சரணங்கள்.

வேதமறிந்தவர் பாதம் பணிந்தவர்
    போதமடைந்திடாத் தீதடைந்தேன்பாவி (இந்த)

பாவிப்பறையாநீ தூரவிலகென்று
    ஆவிதவித்திடப் பாரிலுரைத்திடும் (இந்த)

__________

ராகம் - கௌரிமனோஹரி  ;  தாளம் - சாபு.

பல்லவி.

எப்போதொலையுமிந்தத் துன்பம் - ஜகதீசன்
கருணையிருந்தாலல்லோ இன்பம். (எப்போ)