திருநாளைப்போவார்169நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அனுபல்லவி.

கர்ப்பவாசதுக்கம் ஆனாலும் கேடு
கௌரிமனோகரனைத் தினம் நாடு (எப்போ)

சரணம்.

ஆசையுடனலை யாதவிடங்களுண்டோ
அனவரதமும் சுகலேசமிதில் தெரியாமல்போனதன்றோ
கோபாலகிருஷ்ண-தாசன்தொழும்நடராஜமூர்த்தியைப்
பூசைகள்செய்யாமற் போனது பாசமறவழியில்லை
பஞ்சகோசங்களை நானென்றுநம்பினது (எப்போ)

_________

ராகம் - ஆஹிரி  ;  தாளம் - ரூபகம்.

பல்லவி.

தில்லைவலஞ்சுற்றினார் - சிதம்பரத் - தெல்லைவலஞ்சுற்றினார்.

அனுபல்லவி.

தில்லைவலஞ்சுற்றினார் தேவருமறியாத
எல்லைவாசல்கடந் துள்ளிருளறவேண்டித் (தில்லை)

சரணங்கள்.

சாதிகுறையைத்தானே சந்ததமுநினைந்து
    வேதனைகொண்டுள்ளம் வெதும்பியேவாடிப்
பாதிப்பிறையணியும் பரமசிவனைக்கண்டு
    போதமடைந்துபரி பூரணமாகத் (தில்லை)

மோகவலைக்குட்சிக்கி முழுமூடனாகவே
    போகமேநிலையென்று புத்திகெடாமலுமைப்
பாகனைவேண்டிநற் பரவசமாகியே
    ஏகரசத்திற்றன்னை யிருத்திச்சுகிக்கவே (தில்லை)