ஓராறுதாண்டியே யுண்மணிக்கோட்டைகள்
சீராறுங்காணாத சிதம்பரரகசியம்
ஈராறுகால்கொண்டு இருத்திப்புலனைந்தும்
பேராறுபெருகியே பெருவெளிகாணத் (தில்லை)
_________
வசனம்.
இப்படித் தில்லைத்
தலத்தை விடாமல் சுற்றிவந்தால் தன்னிடம் சுவாமி
வருவாரென்று மனத்தைப்பார்த்துச்
சொல்கின்றார்.
ராகம்-யமுனாகல்யாணி ;
தாளம் - ஆதி.
பல்லவி.
வருவார்வருவார்மனமே நீ
மயங்காதிரு சொன்னேன் சொன்னேன்.
சரணம்.
வேணதுதருவார் கருணைபுரிவார்
தில்லைத் திருவம்பலவர்
பரகதியுந் தருவார் சாதி
பறையனென்று பாரார் நீயதை
உறுதிகொள்ளவேணும் அன்புடனே
அரகரவென்றொரு தரஞ்சொன்னால்போதும் (வருவார்)
__________
வசனம்.
நந்தனார், தன்னை இரட்சிக்கும்
சமயம் இதுதான் என்று சொல்லுகின்றார்.
ராகம் - தன்யாசி ; தாளம் -
ஆதி.
பல்லவி.
இதுநல்ல சமயமையா-இரட்சிக்க-இதுநல்ல
சமயமையா.
|