சரணங்கள்.
இதுநல்லசமயமையா
என்னைரட்சித்தாளும்
ஈச மகேச நடேச சபேச (இதுநல்ல)
பாலகிருஷ்ணன்போற்றும்
பாதங்களைக்காட்டிச்
சீலமுள்ளமுத்தி சேருவதற்காக (இதுநல்ல)
_______
வசனம்.
நந்தனார், இவ்வளவுசொல்லியும்
சுவாமி இரங்காமல் போக
வேண்டியதென்னவென்று
சொல்லுகின்றார்.
ராகம் - பேஹாக் ; தாளம் -
ரூபகம்.
பல்லவி.
இரக்கம்வாராமற் போன தென்ன
காரணம்சுவாமி.
அனுபல்லவி.
கருணைக்கடலென்றுன்னைக்
காதில்கேட்டுநம்பிவந்தேன். (இ)
சரணங்கள்.
பழியெத்தனைநான்செய்யினும் பாவித்திடுஞ்சிதம்பரமென்று
மொழிகற்றவர்வழிபெற்றவர் கனகசபாபதி யேயின்னும் (இ)
ஆலுமருந்தியண்டருயிரை யாதரித்தவுன்கீர்த்தி
பாலகிருஷ்ணன்பாடித்தினமும் பணிந்திடும்நடராஜமூர்த்தி (இ)
_________
கலித்துறை.
அன்று மூவகை யங்கியில்
வேள்விகள் தொடர்ந்தும்
குன்ற லாத்தவப் புண்ணிய மாமலை குவித்தும்
என்று மேற்பவர்க் குதவியும்
வருபவர்க் கன்றி
மன்று ளாடியின் பாதத்தில்
மனங்கொள வருமோ.
|