திருநாளைப்போவார்172நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

நந்தனார், மகாபுண்ணியசாலிகளுக்கு முக்திவருமே யன்றித் தனக்கு வாராதென்று
சொல்லுகின்றார்.

கண்ணிகள்.

ராகம் - தன்யாசி ;  தாளம் - ஆதி.

சாதியில்தாழ்ந்திடும் புலையனுக்கும்பர   கதியோ-வேத
சாஸ்திரநான்கினு மோதறியாதது           விதியோ
நண்டுநந்தைகளை வதைசெய்தருந்திய    தேகம்-மன்றுள்
நடனதரிசனங் காணவென்றாலதி          மோகம்
எந்தவழியைக்கண் டீடேறுவது           ஞாயம்-ஜக
தீசனுக்கன்றோ தெரியமந்தவு            பாயம்
சிதம்பரம்போவே னென்றுரையாத        பாவி- இந்த
ஜன்மமெடுத்து வீணாகத்தவிக்குதென்     னாவி.

________

வசனம்.

நந்தனார், இப்படி நான் ஈனசாதியாயிருந்தாலும், உம்முடைய சரணாரவிந்த
பத்தியை மறந்தவனல்லவென்று சொல்லுகின்றார்.

ராகம் - மணிரங்கு  ;  தாளம் - ரூபகம்.

பல்லவி.

எப்படிக் கெட்டாலுமுந்தன் பொற்பதம்மறவேனானையா.

சரணம்.

அற்புதமாகியதில்லை யம்பலவாணரேயென்
சொற்பனத்தி லும்மையன்றி