மெய்ப்பொரு ளெவையும்வேண்டேன்
தப்பிதமெத்தனைசெய்யினும்
கைப்பிடித்து ஆண்டுகொள்ளும் (எப்படி)
வசனம்.
நந்தனார் தன்னைஜாதியில்
தாழ்ந்தவனென்று அம்பலவாணர் தள்ளிவிடாமல்
ஆட்கொள்ளும் நிச்சயத்தை நம்பிக்கையோடு
தன் மனத்தைப்பார்த்துச் சந்தேகத்தால்
சஞ்சலப் படாமலிருக்கத் தேற்றிவைப்பார்.
___________
திருநாளைப்போவார் புராணம்.
விருத்தம்.
இவ்வண்ண மிரவுபகல்
வலஞ்செய்தங் கெய்தரிய
வவ்வண்ணம் நினைந்தழிந்த வடித்தொண்ட ரயர்வெய்தி
மைவண்ணத் திருமிடற்றார் மன்றுள்நடங் கும்பிடுவ
தெவ்வண்ண மெனநினைந்தே யேசறவி னொடுந்துயில்வார்.
வசனம்.
இந்தப்பிரகாரம்
இராப்பகலாக வலம்வந்து கொண்டு உள்ளே போகக்கூடாத
தன்மையை நினைந்து வருத்தப்பட்டயர்வுபொருந்திய
நந்தனார், கனகசபையில் ஆடுகின்ற
நடனத்தை எப்படி தரிசிக்கலாமென்று விசனத்தோடும்
நித்திரைசெய்து மறுபடியும் எழுந்து
சொல்லுகின்றார்.
___________
|