ராகம் - கீரவாணி ; தாளம் -
மிச்ரஏகம்.
பல்லவி.
இன்னமும் ஸந்தேஹப்படலாமோ
அனுபல்லவி.
பொன்னம்பலந்தனில்
தாண்டவமாடிய
பொற்கழலைநினைவில்
வைக்கத்தெரிந்த நீதான் (இன்)
சரணம்.
அன்னமயமெனும் கோசம்தானே-அந்தணர்முதல்புலையர்வரைக்கும்
பின்னமறவேதோணுதே-இந்தப்
பேதமது காணேன்
தன்னையறிகிறதவமேபெரிதென்று - தரணியில்கோபாலகிருஷ்ணன்
சொன்னதெல்லாம்மறந்து-இந்தமாயச்
சுழலிலேவீழ்ந்தலைந்தாய்சிவ சிவ நீ (இன்)
ராகம் - கன்னடபியாக் ;
தாளம் - ஆதி.
பல்லவி.
விருதாஜன்மமாச்சே வந்தும்
விருதா ஜன்மமாச்சே
அனுபல்லவி.
சதாகாலமும்சந்
நிதானத்திலிருந்து நிதானம்பெறாமல் (விருதா)
சரணங்கள்.
முத்தியளித்திடும்
மூர்த்தியைக்கண்டு
பத்தியைப்பண்ணிப் பதமடையாமல்
(விருதா)
பொற்கழலசையப் பொதுவிலிருந்து
தக்கவராடுந் தன்மையைப்பாராமல்
(விருதா)
தில்லைக்கதிபதி தெரிசனங்கொடுத்து
எல்லையில்வாவென்
றிரங்கியழைத்தும் (விருதா)
_________
|