ராகம் - தேவகாந்தாரி ;
தாளம் - ஆதி.
பல்லவி.
எந்நேரமுமுந்தன்-சந்நிதியிலேநா-னிருக்கவேணுமையா
அனுபல்லவி.
தென்னஞ்சோலைதழைக்கும் தென்புலியூர்
பொன்னம்பலத்தரசே யென்னரசே (எந்நே)
சரணங்கள்.
திசையெங்கினும்புக
ழுஞ்சிவகங்கையும்
தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
பசியெடாதுபார்த்த பேர்க்குக்கலக்கங்கள்
பறந்திட மகிழ்ந்துன்னைப்
பாடிக்கொண்டு (எந்நே)
பஞ்சாக்ஷரப்படி
யுங்கொடிக்கம்பமும்
கோவிலழகும்அரி தானரகசியமும்
அஞ்சல்கூறும்வீர மணிகளோசையும்
அந்தக்கரணமயக்கந்தீர்ந்துபாடிக்கொண்டு
(எந்நே)
சீலமருவும்தெரு வுந்திருக்கூட்டமும்
தேவருலகில்கிடை யாதவதிசயமும்
பாலகிருஷ்ணன்பணியும்பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித்தொழுதுகொண்டு
(எந்நே)
___________
வசனம்.
நந்தனார், தனது பதவிக்கு
யோக்கியமல்லவென்று தள்ளுவாரோ? கொள்ளுவாரோ?
அப்படித் தள்ளினாலும் தில்லையிலேதானே என்
தேகத்தை விடுவதேயன்றித் திரும்பிப்
போகமாட்டேனென்று சொல்லிப் புலம்புவார்.
|