திருநாளைப்போவார்176நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம் - புன்னாகவராளி  ;  தாளம்-ரூபகம்.

பல்லவி.

தள்ளுவாரோ-எந்தனைக்கைக்-கொள்ளுவாரோ

சரணங்கள்.

தள்ளிவிட்டால் நான்போகேன் தனித்திருக்குஞ் சமயமல்ல
அள்ளிவிட்டே னன்பையெ னம்பல வாணனொருகால் (தள்)

எனதுனதென்றபிமான மிச்சையறும் நிஷ்டைபண்ணி
மனமிறந்த தூவெளியில் மருவாத பாவியென்று (தள்)

நாறுமிந்தப் பொய்யுடலை நாளையெண்ணி நான்சுமந்து
தூறுபட்ட துன்பமெல்லாந் தொலைந்ததென்று இங்கேவந்தும் (தள்)

பாலகிருஷ்ணன் தேடிவரும் பாதமலர் நான்காணேன்
வேல்விழியார் மோகங்கொண்ட விவேகமற்ற மூடனென்று (தள்)

சிந்து.

அடடாஇதென்னஜன்மம்-என்று அத்தனுறுமெல்லை சுற்றிவந்தார்
இரவும் பகலோயார்-இதை-ஈசன்கண்டுவிசுவாசமுடன்
பாலகிருஷ்ணன்பணியும்-திருப்-பாதமுள்ளதில்லை நாதனவன்
கனவிலுருவாகி.

திருநாளைப்போவார் புராணம்.

விருத்தம்.

இன்னறரு மிழிபிறவி யிதுதடையென் றேதுயில்வார்
அந்நிலைமை யம்பலத்து ளாடுவா ரறிந்தருளி
மன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாந் தீர்ப்பதற்கு
முன்னணைந்து கனவின்கண் முறுவலொடு மருள்செய்வார்.