வசனம்.
இப்படி நந்தனார், இரவுபக
லோயாமல் தில்லைத்தலத்தைச்
சுற்றிவருவதால் தேகம்
வருத்தமடைந்து வருத்தத்தினால் மயங்கிச்
சாய்ந்து நித்திரையடைந்தார். அந்த
நித்திரையிலே நடராஜமூர்த்தி வந்து காட்சிதந்து
சொல்லுவார். எமதன்பிற்சி றந்த
நந்தனாரே ! உம்மிடத்தில் நமது பத்தர்களாகிய
வேதியர்களை வரச்சொல்லுவோம்.
அவர்கள் முன்பாக நீர் அக்கினிப்பிரவேசமாகி
யெழுந்து வேதியர்களுடனே சபாப்பி
ரவேசம் பண்ணுமென் றுரைபகர்ந்து ஐயன் அந்தர்த்தானமானார்.
நந்தனார் கனவில்
காட்சியானதைக் கண்டு களித்து விழித்தெழுந்து
அளவில்லாத சந்தோஷங் கொண்டு
நன்றியறிந்து சுவாமியைத் தோத்திரம் புரிந்து
சொல்லுகின்றார்.
_________
ராகம் - ஹரிகாம்போதி ;
தாளம் - திசாம்பு.
பல்லவி.
பார்க்கப்பார்க்கத்
திகட்டுமோ-உன்பாததரிசனம்
பார்க்கப்பார்க்கத்
திகட்டுமோ
அனுபல்லவி.
ஆர்க்குமா னந்தம்
பொழியுந்தில்லைத் தாண்டவராயா (பார்)
சரணங்கள்.
தில்லைமூவாயிரமுனிவர்கள்
தினமும்பூசித்திடும்பாதம்
சிற்சபையில்திந்திமிதிமி தோமென்றாடியபாதம்
எல்லையில்லா தவின்பம் எந்தனுக்கருள்செய்திடும்பாதம்
இரவும்பகலுமாயன்கோ
பாலகிருஷ்ணனேத்தும்பாதம் (பார்)
|