திருநாளைப்போவார்178நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம் - ஜஞ்ஜூடி  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

சந்நிதிவரலாமோ-சுவாமி-தரிசனந்தரலாமோ (சந்நிதி)

சரணங்கள்.

இல்லறவாழ்வாம்                 பனிமூடி
   இருந்தேனன்றோ               மிகவாடி
அல்லும்பகலுங்                   கொண்டாடி
   அறியேன்கனக                 சபைநாடிச் (சந்நிதி)

வீதியிலேசற்றே                   வந்திருந்தேன்
   வேடிக்கைபார்த்துக்கொண்       டிருந்தேன்
சாதியிற்றாழ்ந்தவனென்            றறிந்தேன்
   தனித்திருப்போமென்றிங்கே      வந்தேன் (சந்நிதி)

காலால்வீசிக்கனல்                 மூட்டிக்
   கலைமதிமண்டலமே            லோட்டிப்
பாலாறுபெருகவேயெனைக்         கூட்டிப்
   பார்த்ததுமில்லைநான்           தோட்டி (சந்நிதி)

__________

வசனம்.

நந்தனார், தான்கண்ட சொப்பனத்தைக் கொண்டாடுவார்.

ராகம் - நாதநாமக்ரியை  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

சொப்பனங்கண்டுகொண்டேன்-அதிசய
சொப்பனங்கண்டுகொண்டேன்