அனுபல்லவி.
சொப்பனங்கண்டுகொண்டேன் எல்லாங்கற்பனையென்றறிந்தேன்-வேத
தற்பதவாக்கியமேயுருவாகிய வற்புதநடனம்புரிய
இன்று (சொ)
சரணங்கள்.
அம்பிகைமணவாளன் மான்மழு
வணிந்திடுஞ் செந்தோளன்-செம்பொ
னம்பலந்தனிலாட மத்தளம்போட
மறைபாடக் கொண்டாட (சொ)
மண்டலத்தோராசைதீர்ந்து மண்டபமணியோசைநேர்ந்து
மனதுகனிந் துருக மறலி கருக வரந்
தருக வருக (சொ)
மங்கையர்மோகநில்லா தாரையும்
வருந்தியழைக்கும் பொல்லாதாகிய
மாயப்பிணியைவெல்ல மருந்து
சொல்ல வழியிற்செல்ல நல்ல (சொ)
பண்ணவர்முரசடிக்கப் பதஞ்சலி
வியாக்கிரர்பதந்துதிக்க-மாயன்கோ
பாலகிருஷ்ணன்களிக்க
வுடுக்கையெடுக்கவுலகந் துறக்கச் சிறக்கச்
(சொ)
___________
வசனம்.
நந்தனார், தான் கண்ட கனவு
நிஜமோ பொய்யோ வென்று சந்தேகப்படுவார்.
ராகம் - சூர்யகாந்தம் ;
தாளம் - சாபு.
பல்லவி.
கனவோநினைவோ கண்டதுவீணோ
அனுபல்லவி.
மனதிலுறுதிகொள்ள
வழியொன்றுங்காணேன் (கனவோ)
சரணங்கள்.
நித்திரைதனிலொரு சித்தனுருவாய்வந்து
முத்திதருவேனென்று நத்திப்பேசினதுண்டு (கனவோ)
|