திருப்பார். தன் நினைவுவந்து பரவசந்தெளிந்து
ஈசனைப் பணிந்துகொண்டு வந்த பணிவிடை
செலுத்தக் கோவிலார் கேட்கக் கும்பிடுபோட்டுச்
சொல்லுவார்.
____________
கண்ணிகள்.
ராகம்-ஆனந்தபைரவி; தாளம்-ரூபகம்.
பல்லவி.
வாரிருக்குதுதோலிருக்குது
வாங்கிக்கொள்ளுவீரே-மத்தளங்கள்
பேரிகைக்கும்வீணைக்கும்நல்ல விறுக்கிக்கட்டும்விசை
(வாரிருக்)
பேரிருக்குது போதுஞ்சிவன்
பெருமையைக்கொண்டாடி-தினமும்
சீருறைகின்றதில்லைப்பதியில்
சேருதற்குபாயந்தேட (வாரிருக்)
சிறியவனான்சாதியொன்று
மறியாதவனானேழை-சிவ
பெருமானுக்கடியேன்செய்யும் பணிவிடையிது
(வாரிருக்)
நொண்டிச்சிந்து.
ராகம்-புன்னாகவராளி;தாளம்
- மிச்ர ஏகம்.
செய்யும்பணிவிடைகள்-ஈசன்-சிந்தைமகிழ்ந்துகுளிர்ந்திடவேமத்தளம்
பேரிகைக்கும்-இசை-வார்கொடுத்தப்புறந்தோல்கொடுத்துமறவாமலே
தினமும்-நல்ல-வாசம் பெருகுங் கோரோசனையும்
தேவாலயங்கள் தோறும்-தந்து-சித்தமுருகிய பக்திவெள்ளம்
புரண்டோடிக் கங்குகரை-என்று-பேதமறிய
வொண்ணாது கண்டீர்
ஜாதியில் நீசரவர்.
வசனம்.
இப்படி பக்திசெய்யாநின்ற
நந்தனாருடைய வரலாறேதென்றால்,
|