திருநாளைப்போவார்181நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

நந்தனார், இப்படி அநேகவிதமாய் வருவாரோ வாராரோ வென்று பலவிதமாய்க்
கொண்டாடுகின்றார்.

திருநாளைப்போவார் புரணாம்.

விருத்தம்.

இப்பிறவி போய்நீங்க வெரியினிடை நீமூழ்கி
முப்புரிநூன் மார்பருடன் முன்னணைவா யெனமொழிந்த
வப்பரிசே தில்லைவா ழந்தணர்க்கு மெரியமைக்க
மெய்ப்பொருளா னாரருளி யம்பலத்தே மேவினார்.

வசனம்.

நந்தனார், கனவிலேவந்து சொல்லிய நடராஜமூர்த்தி தில்லை மூவாயிரம்பேர்கள்
கனவிலே சொல்லுவார். பத்தர்களே!  எனக்கு மிகவும் பிரியமுள்ள ஒருவர்
திருநாளைப்போவாரென்னும் நாமத்தைக்கொண்டு என்னைக் காண வேண்டுமென்று
தன்னைக் காணிக்கைகொண்டு சாதியிற் றாழ்ந்தவனென்று பயந்துகொண்டு என்னைத்தவிர
மற்றதெல்லாம் அநித்தியமென்று பக்தி பண்ணிக்கொண்டு முக்தி யடைவேண்டுமென்று
தில்லையைச்சுற்றிக்கொண்டு தெற்குக் குளத்தங்கரையில் நின்றுகொண்டு இருக்கிறார்.
அவரை என்னைப்போல் நினைத்து நீங்களெல்லோரும் போய் அக்கினியில் மூழ்கச்செய்து
அழைத்துவாருங்களென்று சொல்லிச் சுவாமி மறைந்தார். இப்படிக் கண்ட கனவை
மூவாயிரம்பேர்களும் பேரம்பலவாசலில் வந்து ஒருவர்க்கொருவர்
 பேசிக்கொள்ளுகின்றார்கள்.