கண்ணிகள்
ராகம் - சங்கராபரணம் ;
தாளம் - அட.
அதிசயமொன்றுகே ளப்பா
தீட்சதரே
அர்த்தராத்திரிப்போதி
லென்னே-என்றன்
மதிபரவசமாகத் துதிமருவுமம்பல
வாணன்கனவில் வந்தா ருன்னே
வாஸ்தவமெனக்குமிந்த வண்ணமாகக்கனவில்
வந்துரைத்தாரறிந்தேன் நாடி-உத
யாஸ்தமயமாகு முன்னமருட்படிக்கு
அமைப்பதுத்தமமென்றா ரோடி
அப்போதங்குவந்த வப்பண்ணதீட்சதர்
ஆமாமிதுவும்நிச் சயந்தான்-என்கோன்
செப்பியசொற்படிச்செந்தீவளர்த்திடச்
செய்யவேண்டுமவ சியந்தான்
அவசியமென்கிறீர் காரியந்தெரியாமல்
ஆருக்கடுக்குமோர் புலையன்-சிறந்த
தவச்சிரேஷ்டர்சூழுந் தலத்தின்வருவதற்குத்
தலைபத்தோவவன்வந்தா லலைவன்
பத்தியுள்ளவனே பரமனுக்குயிர்த்தோழன்
பதஞ்சலிபுலிப்பாதர் சாட்சி-சிவன்
சித்தத்தின்படிசெய்து ஜனனக்கரைகடப்போம்
தெளிவீர்நீங்களிந்த சூட்சி
என்றாரங்குசிவ சங்கரதீட்சதர்
இன்னமுந்தாமச மேதோ-நீசன்
ஒன்றுந்திருச்சந் நிதிக்குவருவதற்கு
ஒருகாலுங்கட்குத் தகாதோ
|