சொல்லுமென்றாரவ
ராமென்றாருங்கட்குச்
சித்தத்திலுள்ளசந் தேகம்-தெளிய
அல்லும்பகலுமோ யாமலேசாஸ்திர
மாராய்வதற்குமனோற் சாகம்
தரும்படிபேசிச் சந்தேகந்தெளிவது
தக்கதென்றுரைத்த மொழியே-நம்பிப்
பெருங்கூட்டமாகவே கூடிச்சென்றாரவர்
பேதமறத்தக்க வழியே.
___________
வசனம்.
தில்லை மூவாயிரவர்கள்
சாஸ்திரிமார்களிடத்திற் சந்தேகந்
தெளிதல்.
விருத்தம்
மறைக்கிழவரிவ்வதஞ்
சென்றார்களாங்கே
மனுவிக்கியானிக ளாசீர்வாதஞ்செய்து
வந்தகாரியமேதோ வுரைப்பீரென்ன
மன்றுளாடுவார்தங்கள் கனவிற்றோன்றிக்
குறைந்தமதிப்புலைச்சாதி
வந்துதித்தோன்
கோதிலானந்தனென்போ னவனல்லன்பன்
கூறுமிவ்வூரெல்லைவலம் வருவான் நாளை
கொணர்ந்தவனைத்தீமூழ்கச் செய்தேயப்பால்
முறைமையொடுசந்நிதியில்
நம்முன்னாக
விடுங்களென்றருளிச்செய் தவர்மறைந்தார்
மூதுணர்ந்தோர்க்கிதுதெரியச்
சொல்லவந்தோம்
மொழியுமாறுத்தரம்யா தென்றார்நீதி
|