அறிந்தவன்னோ
ராமந்தப்படிக்கேசெய்வ
தழகாகுமென்றனர்பின் மகிழ்ச்சியாலே
அந்ததில்லைமாநகரத் தெல்லைசுற்றி
யாடுவார்நந்தனாரைத் தேடுவாரே.
திருநாளைப்போவார் புராணம்.
விருத்தம்.
தம்பெருமான் பணிகேட்ட
தவமறையோ ரெல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பச்ச முடனீண்டி
யெம்பெருமா னருள்செய்த பணிசெய்வோ மென்றேத்தித்
தம்பரிவு பெருகவருந் திருத்தொண்டர்
பாற்சார்ந்தார்.
வசனம்.
தமது பிரானாகிய சபாநாதரிட்ட
கட்டளையைக் கேட்ட தவம்பொருந்திய
பிராமணர்களெல்லாரும் அம்பலவாணரது
கோயிற்றிருவாயிலின் முன்பு கூடிப் பயத்தோடு
நம்முடைய ஆண்டவ ரருள்செய்த வூழியத்தைச் செய்வோமென்றுவணங்கித்
திருநாளைப்போவாரைத் தில்லை
மூவாயிரவர்கள் தேட வருகின்றார்கள்.
ராகம் - நாதநாமக்ரியை ;
தாளம் - ஆதி.
பல்லவி.
தொண்டரைக் காண்கிலேமே -
தில்லையில்வந்த
தொண்டரைக் காண்கிலேமே
அனுபல்லவி.
அண்டசராசர மெங்கும்படியளந்து
மன்றுளாடிய மன்னவர்க்கடிமைத் (தொண்)
|